திரள் திரளாக
வெண்பஞ்சு மேகங்கள்
கார்மேகங்களாக மாறி
ஆவலாக கூடி
மழையாக காத்திருக்கிறதோ?!?
உனக்கு நான்
கண்ணீரில் விடைகொடுப்பதை
மறைக்க!!
திரள் திரளாக
வெண்பஞ்சு மேகங்கள்
கார்மேகங்களாக மாறி
ஆவலாக கூடி
மழையாக காத்திருக்கிறதோ?!?
உனக்கு நான்
கண்ணீரில் விடைகொடுப்பதை
மறைக்க!!
வருடங்கள் பல கடந்தாலும்
தூரதேசம் சென்றவரானாலும்
அடுத்த மாநிலம் சென்றவரானாலும்
சொந்த ஊர் திரும்பையிலே
தோன்றுகின்ற குதூகலம்
இன்னமும் அப்படியே!!!
அடைமழை வேளையில்
அன்னையின் மடியில்
அலுங்காது துயில்
அலாரத்தின் அலறலில்
எழுந்து பார்க்கையில்
விடுதி அறையில் நான்
நிஜத்தை தொலைத்து
கனவிலேனும் வாழ்வதில்
தவணை முறையில்
சொர்க்கம்!!!