தெரிந்தே தவறு செய்துவிட்டு
அப்பாவி போல நான் நிற்பது
தெரிந்ததே இருந்தாலும்
அப்பாவுக்கு முன் கண்டித்து
அவர் அறியாமல் கண் சிமிட்டும்
உன் அன்பை நினைக்கையில்
கண்கள் கலங்கும்!!
ஆனாலும் பிடிச்சிருக்கு...
Thursday, August 20, 2009
பிரியாவிடை!!
திரள் திரளாக
வெண்பஞ்சு மேகங்கள்
கார்மேகங்களாக மாறி
ஆவலாக கூடி
மழையாக காத்திருக்கிறதோ?!?
உனக்கு நான்
கண்ணீரில் விடைகொடுப்பதை
மறைக்க!!
இன்னமும் அப்படியே!!!
வருடங்கள் பல கடந்தாலும்
தூரதேசம் சென்றவரானாலும்
அடுத்த மாநிலம் சென்றவரானாலும்
சொந்த ஊர் திரும்பையிலே
தோன்றுகின்ற குதூகலம்
இன்னமும் அப்படியே!!!
Monday, August 17, 2009
வேர்கள்!!
எத்தனையோ ஆசைகள்
இளமனதின் ஓசைகள்
அத்தனையும்
வித விதமாய்
வண்ண மயமாய்
இருந்தாலும்
அனைத்திலும்
நீக்கமற நிறைந்தது
நீ மட்டும்!!
அதை உணர்கையிலே
அறிந்தேன்
என் வேர்கள்
நம் காதலால்
இடம் பெயர்ந்ததை!!
இளமனதின் ஓசைகள்
அத்தனையும்
வித விதமாய்
வண்ண மயமாய்
இருந்தாலும்
அனைத்திலும்
நீக்கமற நிறைந்தது
நீ மட்டும்!!
அதை உணர்கையிலே
அறிந்தேன்
என் வேர்கள்
நம் காதலால்
இடம் பெயர்ந்ததை!!
Sunday, August 16, 2009
மூச்சு!!!
இரவோ பகலோ
மழையோ வெய்யிலோ
எந்நேரமும்
நீ இல்லாவிட்டால்
நிம்மதியாக
மூச்சுக்கூட
விட முடிவதில்லை
காற்றே!!!
மழையோ வெய்யிலோ
எந்நேரமும்
நீ இல்லாவிட்டால்
நிம்மதியாக
மூச்சுக்கூட
விட முடிவதில்லை
காற்றே!!!
Saturday, August 15, 2009
நாணம்!!
வளர்ந்து தேய்வதும்
தேய்ந்து வளர்வதுமே
வாழ்க்கையாகி விட!!
நீ வரும்
வழி பார்த்து
உன் பார்வை
வரம் வேண்டிடும்
நிலவாகிய நான்
என் சூரியன்
உன்னை கண்டு
மேனி சிவந்தேன்!!
தேய்ந்து வளர்வதுமே
வாழ்க்கையாகி விட!!
நீ வரும்
வழி பார்த்து
உன் பார்வை
வரம் வேண்டிடும்
நிலவாகிய நான்
என் சூரியன்
உன்னை கண்டு
மேனி சிவந்தேன்!!
Saturday, August 8, 2009
அநியாயம்!!
உன் மேல்
எனக்குள்ள காதலை
வார்த்தைகளால்
பிரசவிக்க விளைகையில்
என்னுள்ளேயே இருந்து கொண்டு
வார்த்தைகளை
கைது செய்கிறாயே
என்னடா நியாயம் இது?!?
எனக்குள்ள காதலை
வார்த்தைகளால்
பிரசவிக்க விளைகையில்
என்னுள்ளேயே இருந்து கொண்டு
வார்த்தைகளை
கைது செய்கிறாயே
என்னடா நியாயம் இது?!?
Subscribe to:
Posts (Atom)
.jpg)