Saturday, June 27, 2009

கிறுக்கல்கள்

என்னவனே!!

ராதையாக நான் மாற ஆசை தான்
என் கண்ணனாக நீ வந்தால்
ஆண்டாளாக நான் மாற ஆசை தான்
என் நாராயணனாக நீ வந்தால்
எப்போது வருவாய் என்னவனே?!
என்னை உன்னவளாக்க...


காலக் கொடுமை!!

பிச்சை எடுத்தாவது படிக்க
சொன்னது அந்தக்காலம்
படித்த பின்னும்
பிச்சை எடுப்பது இந்தக்காலம்


உண்மை!

உள்ளம் கோவிலாகி
அதில் உண்மை தெய்வமானால்
மனிதம் ஆட்சி செய்யும்
மாநிலம் செழிக்கும்!

வரமா? சாபமா?

உனை நினைக்கையில் உள்ளம்
கண்ணீரில் நனைகிறது
மறக்க நினைத்தாலோ
ரத்தத்தில் தோய்கிறது
இது வரமா? சாபமா?

மழலைச் செல்வம்!!

அழகுக்கு அழகு சேர்க்கும்
தங்கமும் தோற்றிடுமே
உன் அழகில்!

மென்மையாய் வருடும்
மயிலிறகும் தோற்றிடுமே
உன் மென்மையில்!

கேட்க கேட்க தெவிட்டாத
தீந்தமிழும் தோற்றிடுமே
உன் மழலையில்!

No comments:

Post a Comment