Sunday, July 4, 2010

கண்ணாமூச்சி!

எப்போது வந்தாலும்
ஏற்றுக்கொள்வேன்
என்பதாலோ
எனக்கு இன்னும்
உன் நிழலைகூட
காட்ட மறுத்து
கண்ணாமூச்சி ஆடுகிறாய்!!

Sunday, January 3, 2010

என்னவனே!

உடல் தொடும் தீண்டலால்

வருவதல்ல காதல்!!

உள்ளம் தொடும் தீண்டலால்

வருவதே காதல்!!

என்னவனே!!!

என் உயிர் தொடும்

உன் ஒற்றை

தீண்டலுக்காய்

உடலில்

உயிர் தேக்கி

தவமிருக்கிறேன்!!

எப்போது வருவாய்

என்னவனே?!